ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் 60 இலவச டோக்கன்கள் – சென்னை நகரத்தில் 40 இடங்களில் விநியோகம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்காக ஜூலை முதல் டிசம்பர் வரை, மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் மொத்தம் 60 இலவச பஸ் பயண டோக்கன்களை வழங்குகிறது. இந்த டோக்கன்கள் ஜூலை 31 வரை, தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். 40 முக்கிய பஸ் நிலையங்களில் இவை பெறலாம். டோக்கன் பெற, ரேஷன் அட்டை, ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகள் மற்றும் 2 கலர் புகைப்படங்கள் தேவை. புதிய பயனாளிகளும் அடையாள அட்டை புதுப்பித்தவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.














