மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் வீரராகவ ராவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு – 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 2023ல் தமிழ்நாட்டில் 7 மையங்கள் என ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.














