மத்திய பிரதேசத்தில் மாணவிகளுக்கு இலவச இ-பைக் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநில பட்ஜெட்டில் மாணவிகளுக்கு இலவச இ-பைக், பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. நிதிமந்திரி ஜகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

மத்திய பிரதேச மாநில பட்ஜெட்டில் மாணவிகளுக்கு இலவச இ-பைக், பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. நிதிமந்திரி ஜகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதன் கீழ் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார்.

'முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். பழங்குடியினரான பைகா, பரியா மற்றும் சஹாரியா குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆதார் அனுதய யோஜனாவின் கீழ் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்றும் மத்திய பிரதேச பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu