கோவில்களில் முதியோர்களுக்கு இலவச பயணம் தமிழக அரசு புது திட்டம்

ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் அம்மன் கோவில்களில் 1000 மூத்த குடிமக்களுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்வதற்கான புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை 2024 - 2025 ஆம் நிதி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கும் வறுமை மற்றும் வயது மூப்பின் காரணமாக இறை தரிசனம் செய்ய இயலாத 60 முதல் 70 வயதிற்குட்பட்ட 1000 பக்தர்கள் […]

ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் அம்மன் கோவில்களில் 1000 மூத்த குடிமக்களுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்வதற்கான புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை 2024 - 2025 ஆம் நிதி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கும் வறுமை மற்றும் வயது மூப்பின் காரணமாக இறை தரிசனம் செய்ய இயலாத 60 முதல் 70 வயதிற்குட்பட்ட 1000 பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி,மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை கொண்ட புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்கு ஆடி மாதத்தில் 1000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu