கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் தொடங்கியது

கர்நாடகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் உத்தரவாதங்களை அறிவித்தது. அதாவது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பி.பி.எல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்பது உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்த 5 திட்டங்களில் முதல் திட்டமாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு […]

கர்நாடகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் உத்தரவாதங்களை அறிவித்தது. அதாவது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பி.பி.எல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்பது உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்த 5 திட்டங்களில் முதல் திட்டமாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் 'சக்தி' திட்டம் 11-ந் தேதி தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்திற்கான சக்தி திட்ட தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பெண்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கி சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu