21-ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்

December 17, 2022

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் 21-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அடுத்த அரையாண்டில் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்திற்கு […]

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் 21-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அடுத்த அரையாண்டில் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்படவுள்ளது.

ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வரும் 21ம் தேதி முதல் 31 ஜனவரி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu