இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்- ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதன்படி வருகின்ற 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு 1 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகளையும் மற்றும் 1 கோடியே  63 லட்சம் வேட்டிகளையும் உற்பத்தி செய்ய 200 கோடி ரூபாய் அரசு தரப்பில் நிதி […]

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதன்படி வருகின்ற 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு 1 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகளையும் மற்றும் 1 கோடியே  63 லட்சம் வேட்டிகளையும் உற்பத்தி செய்ய 200 கோடி ரூபாய் அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், வருவாய்த்துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை ஏற்பாடு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது மேலும் இத்திட்டத்தின் அனைத்து மக்களுக்கும் வேட்டி சேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவு கட்டாயம் செய்யப்படுகிறது. இதனை தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu