நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

November 22, 2023

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ. 752 கோடி சொத்துக்கள் அமலாக்க துறையினரால் முடக்கப்பட்டுள்ளது . ஜவஹர்லால் நேரு 1937 இல் தொடங்கிய அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 2008இல் மூடப்பட்டது. அப்போது 90.21 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்தின் மீது கடன் இருந்தது. மேலும் 2012ல் இந்த நிறுவனத்தை முப்பத்தி எட்டு சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா […]

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ. 752 கோடி சொத்துக்கள் அமலாக்க துறையினரால் முடக்கப்பட்டுள்ளது .
ஜவஹர்லால் நேரு 1937 இல் தொடங்கிய அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 2008இல் மூடப்பட்டது. அப்போது 90.21 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்தின் மீது கடன் இருந்தது. மேலும் 2012ல் இந்த நிறுவனத்தை முப்பத்தி எட்டு சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பணத்தை பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனம் பல கோடி சொத்துக்களை அபகரிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது ரூபாய் 751.9 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் டெல்லி மும்பை லக்னோவில் உள்ள ரூபாய் 661.69 கோடியிலான சொத்துக்களை இந்த நிறுவனம் பங்குகள் மூலமாக கையகப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடைமுறைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu