தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக 20 ரெயில்கள் ரத்து மற்றும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
தெலுங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில், ராகவா புரம் மற்றும் ராமகுண்டம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதனால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்தது. சம்பவம் நடைபெற்ற பின்பு, ரெயில் எஞ்சின் டிரைவர் ரெயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தில் சென்று, ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, டெல்லி முதல் தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 20 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 4 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டன. 10 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பயணிகள் அவதியடைந்த நிலையில், உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.