ஐபோன் 12 அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக பிரான்ஸ் புகார்

September 15, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று பிரான்ஸ் புகார் தெரிவித்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ஐ போன் 12 அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய பிரிகுவென்ஸி முகமை தெரிவித்துள்ளது. இதனால் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அமைச்சர் […]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று பிரான்ஸ் புகார் தெரிவித்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ஐ போன் 12 அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய பிரிகுவென்ஸி முகமை தெரிவித்துள்ளது. இதனால் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அமைச்சர் ஜூன் நோயல் கூறுகையில், மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் இந்த அதிக கதிர்வீச்சை நிறுத்த முடியும் என்றும் அதை செய்ய தவறினால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 மாடல்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். இதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய கதிர்வீச்சு தர நிலைக்கு உட்பட்டுதான் ஐபோன் 12 இயக்கம் இருக்கிறது என்று உலக நாடுகளின் முகமைகள் தெரிவித்ததாக ஆப்பிள் கூறியுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கையை அந்நிறுவனம் காட்டியுள்ளது. இதற்கு பிரான்ஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் மேற்கொண்ட பரிசோதனை ஆப்பிள் மேற்கொண்ட சோதனைக்கு முற்றிலும் மாறானது என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu