பிரான்சில் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக தங்களுடன் அணி சேர வேண்டும் என்று மிதவாத கட்சிகளுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஆறு முதல் ஒன்பதாம் தேதி வரை நடந்தது. இதில் தீவிர வலது சாரி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியது. மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி இரண்டாவது இடத்திற்கு வந்தது. அதையடுத்து மக்களின் ஆதரவை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தார். இந்த சூழலில் மேக்ரான் பாரிசில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத பேரணி கட்சியின் வாக்குகளில் பாதியை கூட மிதவாத கட்சிகள் பெறவில்லை. இந்த தேர்தலில் மிதவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தீவிர வலதுசாரி கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்று அவர் கோரினார்.