பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த பிரெஞ்சு ஓபன் பேட்மிட்டன் தொடரில் சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பிரெஞ்சு ஓப்பன் பேட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி தைவானின் பி.ஹெச். யாங் - ஜே. எச்.லீ. ஜோடியுடன் மோதியது. இதில் முதல் செட்டில் 21- 11 என இந்திய ஜோடி எளிதாக ஆட்டத்தை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் தைவான் ஜோடி அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றியது என்றாலும் இரண்டாவது ஜோடியிலும் 21- 17 என கைப்பற்றி இந்திய ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.