பிரெஞ்சு ஓப்பன் பேட்மிட்டன் தொடரில் சாத்விக் - சிராஜ் ஜோடி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது.
பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓப்பன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டை பிரிவில் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் செட்டி இணை தென்கொரியாவின் சியி சயூங் - ஜே - காங் - மின் - ஹியூக் இணையுடன் மோதியது. இதில் சாத்விக் - சிராக் ஜோடி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதே தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மற்றும் தாய்லாந்தில் குன்லவிட் விடிட்சார் மோதினர். இதில் 22-20,21-13,21-11 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியடைந்தார்