பாரிஸில் நடைபெற்று வரும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அசரென்கா, சபலன்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றும் முடிந்து முதல் சுற்று போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அசரென்கா அர்ஜென்டினாவின் ஃபெடோ ரோஸ்காவை 6-1,6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரஷ்ய வீராங்கனை ஆண்ட்ரியாவை 6-1,6-2 6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.














