இந்த வார இறுதியில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையில், அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை மேக்ரான் சந்திப்பார் என கூறப்படுகிறது. மேலும், இது மேக்ரானின் முதல் இலங்கை பயணமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இலங்கைக்கு வருகை தரும் முதல் பிரான்ஸ் அதிபராக மேக்ரான் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றுக்கு, பிரான்ஸ் அதிபர் பயணிப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு இமானுவேல் மேக்ரான் பயணிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது இலங்கை பயணம் இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, மேக்ரான் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அவரது வருகை, இருதரப்பு உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நிலையை சீரமைப்பதில் அவரது பயணம் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.














