ரிஷி சுனக்குடன் கைகோர்த்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

October 29, 2022

ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். இதற்காக ஆறு மாதங்களில் கைதேர்ந்த ஊழியர்களுடன் புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதாக ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 38,400 புலம்பெயர்ந்தோர் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். குறிப்பாக வியாழக்கிழமை மட்டும் 308 பேர்கள் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் போதிய ஊழியர்களைக் கொண்டு புதிய […]

ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். இதற்காக ஆறு மாதங்களில் கைதேர்ந்த ஊழியர்களுடன் புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதாக ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை 38,400 புலம்பெயர்ந்தோர் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். குறிப்பாக
வியாழக்கிழமை மட்டும் 308 பேர்கள் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் போதிய ஊழியர்களைக் கொண்டு புதிய தொழில்நுட்பத்துடன் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் இந்த விவகாரம் தொடர்பான தமது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த உரையாடலில் உக்ரைன், காலநிலை மாற்றம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu