ஜெர்மனியின் புதிய அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் தேர்வு

May 6, 2025

ஜெர்மனியின் 10-வது அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) உள்ளிட்ட கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிபரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் ஜெர்மனியின் 630 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கன்சர்வேடிவ் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ், முதல் சுற்றில் தேவையான 316 வாக்குகளைப் பெற முடியாமல் 310 வாக்குகள் பெற்றார். இரண்டாவது சுற்றில் 325 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற […]

ஜெர்மனியின் 10-வது அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) உள்ளிட்ட கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிபரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் ஜெர்மனியின் 630 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கன்சர்வேடிவ் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ், முதல் சுற்றில் தேவையான 316 வாக்குகளைப் பெற முடியாமல் 310 வாக்குகள் பெற்றார். இரண்டாவது சுற்றில் 325 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவர், ஜெர்மனியின் 10-வது அதிபராக பதவியேற்கிறார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu