தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வரும் 28ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ல் துவக்கி வைக்கிறார். இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் முககவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட உள்ளது. இந்த பணியில் 28ம் தேதி முதல் ரேஷன் ஊழியர்களை ஈடுபடுத்த ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.