ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையிலேயே தட்கல் டிக்கெட் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் ரெயில் முன்பதிவில் போலி கணக்குகள் காரணமாக பயணிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் 2.5 கோடி போலி IRCTC கணக்குகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையிலேயே தட்கல் டிக்கெட் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களது IRCTC கணக்கில் ‘மை அக்கவுண்ட்’ பகுதியில் உள்ள ‘ஆத்தென்டிகேட் யூசர்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆதார் அட்டையில் உள்ளபடியே பெயரை பதிவு செய்து, பெறும் ஓ.டி.பி.யை உள்ளீடு செய்ய வேண்டும். பெயர் சரியாக இல்லாவிட்டால் இணைப்பு நடக்காது. ஆதாரம் இணைப்பை தாமதிக்காமல் செய்ய IRCTC நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.














