நிகழும் அக்டோபர் மாதத்தில் பல்வேறு அரிய வானியல் நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. இதனால் வானியலாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
அக்டோபர் 8 மற்றும் 9ம் தேதிகளில், டிராகனாய்ட் எரி நட்சத்திர நிகழ்வு நடைபெற உள்ளது. இதன் போது, ஒரு மணி நேரத்திற்கு 10 எரி நட்சத்திரங்கள் பூமியில் விழும் என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக, அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில், நிலவுக்கு மிகவும் நெருக்கமாக வெள்ளி கிரகம் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திலும் முக்கியமாக, அக்டோபர் 14ஆம் தேதி, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இது வளைய சூரிய கிரகணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் கிரகணத்தை காண முடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.