பூமியில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரக வாழிடம் - நாசா பகிர்வு

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நாசா, செவ்வாய் கிரகத்தின் வாழிடம் போன்ற தோற்ற அமைப்பை பூமியில் உருவாக்கியுள்ளது. நான்கு அறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் அதிகமான செந்நிற மணல் ஆகியவற்றை கொண்டு இந்த வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1700 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாழிடம், ‘மார்ஸ் டியூன் ஆல்பா’ என்று அழைக்கப்படுகிறது. இதில் வாழ்வதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள், ஒரு வருடம் இங்கு தங்க வைக்கப்பட உள்ளனர். அப்போது, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் தங்கும் […]

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நாசா, செவ்வாய் கிரகத்தின் வாழிடம் போன்ற தோற்ற அமைப்பை பூமியில் உருவாக்கியுள்ளது. நான்கு அறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் அதிகமான செந்நிற மணல் ஆகியவற்றை கொண்டு இந்த வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1700 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாழிடம், ‘மார்ஸ் டியூன் ஆல்பா’ என்று அழைக்கப்படுகிறது. இதில் வாழ்வதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள், ஒரு வருடம் இங்கு தங்க வைக்கப்பட உள்ளனர். அப்போது, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் தங்கும் பொழுது வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா அளித்துள்ள தகவலின் படி, டெக்சாஸ் மாகாணம் ஹவுஸ்டனில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கூடத்தில், இவ்வருட கோடையில், முதல்கட்டமாக 4 பேர் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த வாழிடத்திற்குள் 2 கழிவறைகள், ஒரு விவசாய நிலம், ஒரு மருத்துவ அறை ஆகியவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ள இந்த வாழிடம், செவ்வாய் கிரக சூழலைப் போலவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த வாழிடம் முழுமையும் 3டி பிரிண்டட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. விரைவில், நிலவைப் போன்ற வாழிட அமைப்பை கொண்ட மற்றொரு ஆய்வுக்கூடத்தை உருவாக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu