கடந்த ஏப்ரல் மாதம் முதல், இந்தியாவின் பல்வேறு மசாலா பொருட்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கூடுதலாக எத்திலின் ஆக்சைடு எனப்படும் புற்றுநோய் காரணி இந்திய மசாலா பொருட்களில் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் fssai நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2200 நிறுவனங்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் 111 மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தாவரங்களுக்கான பூச்சி மருந்து மூலம் எத்திலின் ஆக்சைடு எனப்படும் வேதிப்பொருள் உணவில் கலக்கிறது. இந்திய மசாலா பொருட்களில் இது அளவுக்கு அதிகமாக உள்ளது fssai பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது தவிர, பல்வேறு வேதி பரிசோதனைகளை fssai மேற்கொண்டு வருகிறது. இதுவரை 111 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட நிலையில், 4000 நிறுவனங்களிடம் பரிசோதனை விரிவு செய்யப்படுகிறது. இதனால் தடை செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை உயரும் என கருதப்படுகிறது.