மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவைலும் சுதந்திர தின உரையிலும் பேசினார். இதனை அடுத்து அம்மாநில முதல்வர் அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அங்கு நிலைமை சீரானதை தொடர்ந்து ஊரடங்கு தளர்த்த பட்டு இருந்தது. இது நேற்று மாலையில் மீண்டும் தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபூர், காக்சிங், தவுபால்,இம்பால் மேற்கு,இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு, பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வேண்டும் எனும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இவை அமல்படுத்தப்பட்டுள்ளது.இங்கு காலை 5 மணியில் இருந்து மாலை 6 மணிவரை ஊரடங்கு தளர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.














