கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூபாய் 3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 19ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டம் தொடர்பான அறிவிப்பு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு புதிதாக ஆர்சிசி கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில் ஒரு வீட்டிற்கு 3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3100 கோடி நிதி ஒதுக்கி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வீடுகள் அனைத்தும் 300 சதுர அடி அளவில் சமையல் அறையுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.