ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தளபதியாக கடந்த 2022 ஏப்ரல் 20-ம் தேதி மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் மே 31 உடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் இவரது பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது