தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயில் பிப்ரவரி 4,11,18,25 மற்றும் மார்ச் 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இதேபோல தாம்பரத்திலிருந்து திங்கட்கிழமை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8:55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12,19,26 மற்றும் மார்ச் 4,11,18,25 ஏப்ரல் 1ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று திருநெல்வேலி மேட்டுப்பாளையம் இடையே செல்லும் சிறப்பு ரயில்களும் இதே தேதிகளில் இயக்கப்பட உள்ளது.