புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற 'ஜி - 7' நாடுகள் முடிவு

April 17, 2023

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற 'ஜி - 7' நாடுகள் முடிவு செய்துள்ளது. ஜி -7 அமைப்பின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு ஆசிய நாடான ஜப்பானின் சப்போரோவில் இரண்டு நாட்கள் நடந்தது. வரும் மே மாதம், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடக்க உள்ள ஜி - 7 உச்சி மாநாட்டையொட்டி, பருவநிலை மாறுபாடு தொடர்பான உறுதிமொழிகள் அடங்கிய, 36 பக்க கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் 2050க்குள், சுற்றுச்சூழலை பாதிக்கும் கரியமில வாயுவை வெளியிடுவதை முழுதும் […]

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற 'ஜி - 7' நாடுகள் முடிவு செய்துள்ளது.

ஜி -7 அமைப்பின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு ஆசிய நாடான ஜப்பானின் சப்போரோவில் இரண்டு நாட்கள் நடந்தது. வரும் மே மாதம், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடக்க உள்ள ஜி - 7 உச்சி மாநாட்டையொட்டி, பருவநிலை மாறுபாடு தொடர்பான உறுதிமொழிகள் அடங்கிய, 36 பக்க கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் 2050க்குள், சுற்றுச்சூழலை பாதிக்கும் கரியமில வாயுவை வெளியிடுவதை முழுதும் நிறுத்துவதற்கான இலக்கை எட்ட அனைத்து நாடுகளும் முயற்சிக்க வேண்டும். அதற்கு முன், 2050க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுடன் இணைந்து இதை செயல்படுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu