ஜி 20 மாநாடு - கல்வி துறை ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

September 6, 2023

டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருப்பதால் கல்வித் துறை அதிகாரிகள் டெல்லியிலேயே இருக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பல நாட்டு முக்கிய தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் ஆகியவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதனை முன்னிட்டு டெல்லியில் 8 ஆம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை பொது விடுமுறை […]

டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருப்பதால் கல்வித் துறை அதிகாரிகள் டெல்லியிலேயே இருக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பல நாட்டு முக்கிய தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் ஆகியவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதனை முன்னிட்டு டெல்லியில் 8 ஆம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 7ம் தேதி ஜென்மாஷ்டமி வருவதால் அங்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வித் துறையை சேர்ந்த ஊழியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் ஜி20 மாநாட்டில் பல்வேறு துறை சார்பில் வேலையில் ஈடுபட மனித வளம் தேவைப்படுவதால் கல்வித் துறை அதிகாரிகள் செல்லும் நிலை ஏற்படலாம். இதற்காக அனைவரும் டெல்லியில் தங்க வேண்டும். போன் எப்போதும் செயலில் இருக்க வேண்டும். மேலும் தேவைக்கு அழைக்கும் பொழுது உடனடியாக வரவேண்டும் என டெல்லி அரசு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu