அணுசக்தி நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தியது - ஐ .நா

June 15, 2024

ஈரான் அணுசக்தி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது என்று ஐநாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. காசா போரில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐநா அணுசக்தி அமைப்பு கூறி இருப்பதாவது, சமீப காலமாக ஈரான் அணுசக்தி திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிர்படுத்தி உள்ளது. அதிக திறன் கொண்ட யுரேனியம் சுத்திகரிப்பு இயந்திரங்களை அந்த நாடு அமைத்து வருகிறது. மேலும் பல சுத்திகரிப்பான்களை நிறுவ ஈரான் திட்டமிட்டுள்ளது. […]

ஈரான் அணுசக்தி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது என்று ஐநாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

காசா போரில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐநா அணுசக்தி அமைப்பு கூறி இருப்பதாவது, சமீப காலமாக ஈரான் அணுசக்தி திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிர்படுத்தி உள்ளது. அதிக திறன் கொண்ட யுரேனியம் சுத்திகரிப்பு இயந்திரங்களை அந்த நாடு அமைத்து வருகிறது. மேலும் பல சுத்திகரிப்பான்களை நிறுவ ஈரான் திட்டமிட்டுள்ளது. கடந்த திங்களன்று இரண்டு சுத்திகரிப்பான்களை இயக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஈரானின் திறன் மேலும் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிறகு படிப்படியாக அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் அதிகரித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu