காபோனில் இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்

September 5, 2023

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்தது. பின்னர் அதிகாரத்தை கைப்பற்றியது. தொடர்ச்சியாக அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால […]

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்தது. பின்னர் அதிகாரத்தை கைப்பற்றியது. தொடர்ச்சியாக அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்த்த ராணுவக்குழுவின் தலைவர் ஜெனரல் பிரைஸ் நிகுமா, நாட்டின் இடைக்கால அதிபராக இன்று பதவியேற்கிறார். ஜெனரல் பிரைஸ் நிகுமாவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu