இந்தியாவின் மிகப்பெரிய விண்வெளி திட்டங்களில் ஒன்றான ககன்யான் திட்டம் புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா பயணம் தொடங்குகிறது. இந்த ஆளில்லா பயணம், 2026 ஆம் ஆண்டு நான்கு இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் முக்கியமான பணியை நோக்கிய முதல் படியாகும்.
இந்த ஆளில்லா பயணத்தின் போது, விண்கலத்தின் செயல்பாடு மற்றும் திரும்ப பூமிக்கு வருதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சோதிக்கப்படும். இந்த ஆளில்லா பயணத்தை கண்காணிக்க பசிபிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்களில் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி தொடர்பான உபகரணங்கள் அடங்கிய கப்பல்களை இஸ்ரோ நிறுத்த உள்ளது.














