விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் இஸ்ரோவினால் ஏற்படுத்தப்பட்டது.விண்வெளி ஆய்வில் இஸ்ரோ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டத்தைப் கனவு திட்டமாக வைத்திருந்தனர். அது ககன்யான் திட்டம் மூலம் இன்று செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மோசமான கால நிலையினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த விண்கலம் மனிதர்களை தரையில் இருந்து விண்ணில் 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்துச் செல்லும். இந்த திட்டத்தை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான சோதனை மூன்று கட்டங்களாக நடை பெற உள்ளது.
ராக்கெட் விண்ணில் ஏற்படும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் குரூ எஸ்கேப் சிஸ்டம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட பரிசோதனையாக பரிசோதிக்க இன்று காலை 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 10 மணிக்கு ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பின்னர் இது திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக பயணித்து 17 கிமீ தூரம் சென்று வெற்றிகரமாக பிரிந்து வந்தது. இதனை இந்திய கடற்படை சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்தனர். திட்டத்தின் முதல் கட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.