கெயில் நிறுவனத்தின் லாபம் 92% சரிவு

February 6, 2023

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கெயில், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் 92% குறைந்து, 246 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 35380 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 37% உயர்வாகும். எரிவாயு விலை உயர்த்தப்பட்டதால், வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு செலவினங்கள் 62% உயர்ந்து, 35847 கோடியாக பதிவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 1750 […]

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கெயில், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் 92% குறைந்து, 246 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 35380 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 37% உயர்வாகும். எரிவாயு விலை உயர்த்தப்பட்டதால், வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு செலவினங்கள் 62% உயர்ந்து, 35847 கோடியாக பதிவாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 1750 கோடி லாபத்தில் இயங்கிய கெயில் நிறுவனம், 2022 ஆம் ஆண்டில் 86 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் துறை முந்தைய ஆண்டில் 365 கோடி லாபத்தை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 349 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. மேலும், பெட்ரோகெமிக்கல் துறை வருவாய் 70% சரிந்து, 750 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் வர்த்தகம் 29 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu