இந்தியாவில், வெள்ளைப் பூண்டின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிலோ பூண்டு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பூண்டு விளைச்சலில் முக்கிய அங்கம் வகிக்கும் நாசிக், புனே போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளன. மோசமான வானிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பூண்டு வரத்து குறைந்ததால், கடந்த இரண்டே வாரங்களில் வெள்ளைப் பூண்டு விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.














