தனியார் பள்ளியில் வாயு கசிவு

October 26, 2024

சென்னையில் தனியார் பள்ளியில் வாயு கசிவின் காரணமாக 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால், மாணவ-மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், சில மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை வெளியேற்றியதால், பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்தனர், இதனால் அங்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது. மேலும் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா அல்லது பள்ளியின் ஆய்வு கூடத்திலிருந்து கசிந்ததா என்பதில் விசாரணை […]

சென்னையில் தனியார் பள்ளியில் வாயு கசிவின் காரணமாக 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால், மாணவ-மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், சில மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை வெளியேற்றியதால், பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்தனர், இதனால் அங்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது. மேலும் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா அல்லது பள்ளியின் ஆய்வு கூடத்திலிருந்து கசிந்ததா என்பதில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu