GATE 2026 தேர்விற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 முதல் தொடக்கம்

August 25, 2025

GATE 2026 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் GATE 2026 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 30 பாடப்பிரிவுகளுக்காக நடத்தப்படவுள்ளது. தேர்வர்கள் ஒன்று அல்லது இரண்டு தாள்களை தேர்ந்தெடுத்து எழுதலாம். இளநிலை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு/மூன்றாம் ஆண்டு மாணவர்கள் […]

GATE 2026 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் GATE 2026 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு 30 பாடப்பிரிவுகளுக்காக நடத்தப்படவுள்ளது. தேர்வர்கள் ஒன்று அல்லது இரண்டு தாள்களை தேர்ந்தெடுத்து எழுதலாம். இளநிலை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு/மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26 ஆகும். தேர்வுகள் 2026 பிப்ரவரி 7, 8, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu