சங்கீ இண்டஸ்ட்ரீஸ்-ன் 50 பில்லியன் ரூபாய் பங்குகளை வாங்கிய அம்புஜா சிமெண்ட்ஸ்

August 3, 2023

அதானி குழுமத்தை சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம், சங்கீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 56.74% பங்குகளை வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 50 பில்லியன் ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக சங்கீ இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. குஜராத்தை சேர்ந்த சங்கீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சிமெண்ட் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. இதனை அம்புஜா சிமெண்ட்ஸ் கையகப்படுத்தி உள்ளதால், அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகம் மேலும் அதிகரிக்க உள்ளது. அத்துடன், சிமெண்ட் வர்த்தகத்தில் […]

அதானி குழுமத்தை சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம், சங்கீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 56.74% பங்குகளை வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 50 பில்லியன் ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக சங்கீ இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.

குஜராத்தை சேர்ந்த சங்கீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சிமெண்ட் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. இதனை அம்புஜா சிமெண்ட்ஸ் கையகப்படுத்தி உள்ளதால், அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகம் மேலும் அதிகரிக்க உள்ளது. அத்துடன், சிமெண்ட் வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்துக்கு போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்க உள்ளது.

சங்கீ இண்டஸ்ட்ரீஸ் - ன் 56.74% பங்குகளை வாங்கிய பின்னர், கூடுதலாக 26% பங்குகளை ஓபன் ஆஃபர் ஆக அதானி குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு பங்கு 114.22 ரூபாய்க்கு விற்கப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu