கௌதம் அதானி ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு - பசுமை ஹைட்ரஜன் திட்டம் குறித்து விவாதம்

July 21, 2023

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை தந்துள்ளார். அவரை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று சந்திக்க உள்ளார். இலங்கையில் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை நிறுவுவது குறித்து இருவரும் கலந்துரையாடுவர் என கூறப்படுகிறது. அதானி குழுமம், இலங்கையில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை தொடங்கி பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக, பசுமை ஹைட்ரஜன் திட்டம் தொடங்குவது குறித்து இன்று விவாதிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இலங்கையில், அதானி […]

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை தந்துள்ளார். அவரை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று சந்திக்க உள்ளார். இலங்கையில் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை நிறுவுவது குறித்து இருவரும் கலந்துரையாடுவர் என கூறப்படுகிறது.

அதானி குழுமம், இலங்கையில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை தொடங்கி பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக, பசுமை ஹைட்ரஜன் திட்டம் தொடங்குவது குறித்து இன்று விவாதிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இலங்கையில், அதானி குழுமம் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி, இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு கௌதம் அதானி ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதிவில், பசுமை ஹைட்ரஜன் திட்டம் பற்றிய குறிப்பையும் அதானி வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu