அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சுமத்தி இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை செய்ய செபிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. செபி அமைப்பு இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், நெடு நாட்களாகியும் விசாரணை நிறைவு பெறாததால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழக்கை ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றுவதற்கு எந்த அடிப்படை காரணமும் இல்லை; செவி அமைப்பே தொடர்ந்து விசாரணை செய்யலாம் என கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதானி குழுமத்துக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. எனவே, கௌதம் அதானி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘வாய்மையே வெல்லும்’ என பதிவிட்டுள்ளார். அதானி குழுமத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 15% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.