உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானியை முந்தினார் அம்பானி

February 1, 2023

கடந்த சில நாட்களாக, அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வந்த நிலையில், இன்று கௌதம் அதானியை, முகேஷ் அம்பானி முந்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இன்றைய சந்தை நிலவரத்தின் படி, அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 75.1 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதே வேளையில், ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்து மதிப்பு 83.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்நிலையில், முகேஷ் அம்பானி உலக […]

கடந்த சில நாட்களாக, அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வந்த நிலையில், இன்று கௌதம் அதானியை, முகேஷ் அம்பானி முந்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இன்றைய சந்தை நிலவரத்தின் படி, அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 75.1 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதே வேளையில், ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்து மதிப்பு 83.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்நிலையில், முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 9ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். மேலும், கௌதம் அதானி 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அளவில், முகேஷ் அம்பானி முதலிடத்தையும், கௌதம் அதானி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 26.1 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும், இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 58வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu