உலகின் மூன்றாவது பணக்காரர் ஆகிய கவுதம் அதானி

August 30, 2022

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில், கவுதம் அதானி மூன்றாவது இடத்தைப் பிடித்து, புதிய வரலாறு படைத்துள்ளார். முதல் தலைமுறை தொழிலதிபரான கவுதம் அதானி, அதானி குழுமத்தின் தோற்றுநர் மற்றும் தலைவராவார். கடந்த ஐந்து வருடங்களில் இவரது நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, 60 வயதாகும் கவுதம் அதானி, கடந்த சில வருடங்களாகவே, மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட், பசுமை ஹைட்ரஜன், உலோக சுத்திகரிப்பு நிலையங்கள், சோலார் செல் உற்பத்தி போன்ற வளரும் […]

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில், கவுதம் அதானி மூன்றாவது இடத்தைப் பிடித்து, புதிய வரலாறு படைத்துள்ளார்.

முதல் தலைமுறை தொழிலதிபரான கவுதம் அதானி, அதானி குழுமத்தின் தோற்றுநர் மற்றும் தலைவராவார். கடந்த ஐந்து வருடங்களில் இவரது நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, 60 வயதாகும் கவுதம் அதானி, கடந்த சில வருடங்களாகவே, மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட், பசுமை ஹைட்ரஜன், உலோக சுத்திகரிப்பு நிலையங்கள், சோலார் செல் உற்பத்தி போன்ற வளரும் துறைகளில் கால் பதித்து, நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். தற்போது, ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும் பங்கு பெற்று, தகவல் தொடர்பு துறையிலும் தனது அடையாளத்தை நிறுவ உள்ளார். அதானி குழுமத்தின் அசுரர் வளர்ச்சியால், ப்ளூம்பர்க் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் என்பது தினம் தினம் வெளியிடப்படும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஆகும். இதில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பிடிக்கும் முதல் ஆசியர் என்ற வரலாறை கவுதம் அதானி படைத்துள்ளார். சுமார் 137.4 பில்லியன் அமெரிச்சா டாலர்கள் சொத்து மதிப்புடன், மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ள இவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். முதல் இரண்டு இடங்களில், 251 பில்லியன் மற்றும் 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனத்தின் தோற்றுநர் ஜெப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர். சுமார் 91.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில், பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் தொழில் செய்து வரும் அதானி குழுமம், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சுகாதாரம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu