மகனின் திருமணத்தை முன்னிட்டு 10000 கோடி நன்கொடை வழங்கிய கௌதம் அதானி

February 10, 2025

தொழிலதிபர் கௌதம் அதானி தனது மகன் ஜீத் அதானியின் திருமணத்தின்போது ₹10,000 கோடியை மருத்துவ, கல்வி மற்றும் தொழில் பயிற்சி மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த மகத்தான நன்கொடை மூலம், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும். 28 வயதான ஜீத் அதானி, பிப்ரவரி 9-ம் தேதி அகமதாபாத்தில் டிவா ஷாவை மணந்தார். ஜீத், அதானி விமான நிலைய குழுமத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். டிவா, […]

தொழிலதிபர் கௌதம் அதானி தனது மகன் ஜீத் அதானியின் திருமணத்தின்போது ₹10,000 கோடியை மருத்துவ, கல்வி மற்றும் தொழில் பயிற்சி மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த மகத்தான நன்கொடை மூலம், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.

28 வயதான ஜீத் அதானி, பிப்ரவரி 9-ம் தேதி அகமதாபாத்தில் டிவா ஷாவை மணந்தார். ஜீத், அதானி விமான நிலைய குழுமத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். டிவா, பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். ஜெயின் மற்றும் குஜராத்தி பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் எந்த பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக பிரயாக்ராஜ் சென்றிருந்த அதானி, தனது மகனின் திருமணம் எளிமையாக நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, ஆடம்பரமின்றி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu