ரேமண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கௌதம் சிங்கானியா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மீண்டும் தலைமை பொறுப்பில் அமர்த்துவதற்கு ரேமண்ட் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
ரேமண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் பங்குபெறும் வருடாந்திர சந்திப்பு ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் மேற்படி எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் அவரது புதிய பதவிக்காலம் தொடங்குகிறது. பங்குச் சந்தை அறிவிப்புகளுக்கு உட்பட்டு இந்த நியமனம் நிகழ்வதாக ரேமண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.