பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்

August 30, 2023

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். கீதிகா ஸ்ரீவஸ்தவா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை பொறுப்பை விரைவில் ஏற்க உள்ளார். அந்த வகையில், பாகிஸ்தான் இந்திய தூதரகத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக வரலாற்றில் இடம் பிடிக்க உள்ளார். தற்போதைய நிலையில், பாகிஸ்தான் இந்திய தூதரக தலைமை பொறுப்பில் இருக்கும் எம் சுரேஷ் குமார், கீதிகா […]

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதிகா ஸ்ரீவஸ்தவா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை பொறுப்பை விரைவில் ஏற்க உள்ளார். அந்த வகையில், பாகிஸ்தான் இந்திய தூதரகத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக வரலாற்றில் இடம் பிடிக்க உள்ளார். தற்போதைய நிலையில், பாகிஸ்தான் இந்திய தூதரக தலைமை பொறுப்பில் இருக்கும் எம் சுரேஷ் குமார், கீதிகா ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றவுடன் நாடு திரும்புவார் என கருதப்படுகிறது.
கடந்த 2019 ஆகஸ்ட் முதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் தூதர்கள் இன்றி இயங்கி வருகின்றன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய விவகாரத்தை தொடர்ந்து இந்த நடைமுறை இருந்து வருகிறது. தூதரகங்களின் தலைமை பொறுப்பு வெளியுறவுத்துறை அதிகாரிகளால் வகிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கீதிகா ஸ்ரீவஸ்தவாவின் நியமனம் அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu