இந்த ஆண்டின் மிகப்பெரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஜெமினிட் விண்கல் மழை இன்று, நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் இந்த விண்கல் மழை அதிக அளவில் காணப்படும். சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு 100 க்கும் மேற்பட்ட விண்கற்கள் வானில் பளிச்சிட்டு மறைவதை நாம் காணலாம்.
200 பைட்டன் என்ற சிறுகோளின் சிதைவுகளால் உருவாகும் இந்த விண்கல் மழை, ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக காட்சி தரும். இந்த ஆண்டு, உச்சக்கட்டத்தில் ஜெமினி நட்சத்திரக் கூட்டத்திற்கு அருகில் நிலவு இருந்தாலும், பிரகாசமான விண்கற்களை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை காண, ஒளியில் குறைவான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஓரியன் நட்சத்திரக் கூட்டத்திற்கு அருகில் உள்ள ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தை கவனிக்கவும்.