இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்ட மசோதா இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் தாக்கல் செயல்பட்டது. ithnp மூலமாக இந்தியாவிலேயே முதலில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய மாநிலம் என்னும் பெயரை உத்தரகாண்ட் மாநிலம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் தாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் படி ஆண் மற்றும் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை, தத்தெடுக்கும் குழந்தைக்கும் சொத்துகளில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமணத்தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.