இங்கிலாந்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது

July 4, 2024

இங்கிலாந்தில் இன்று பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உள்ள 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 326 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உள்ளது. நாடு முழுதும் சுமார் 40,000 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அடையாள அட்டை […]

இங்கிலாந்தில் இன்று பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உள்ள 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 326 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உள்ளது. நாடு முழுதும் சுமார் 40,000 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அடையாள அட்டை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். இங்கிலாந்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர்கள் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu