இந்திய அரசாங்கம் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (GIC Re) நிறுவனத்தின் 6.8% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் அரசுக்கு சுமார் ரூ.4,700 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்திய அரசாங்கம் GIC Re-யில் 85.8% பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் பங்கு விற்பனையில், ஒரு பங்கின் விலை ரூ.395 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்திய இறுதி விலையில் இருந்து 6% தள்ளுபடியாகும். “விற்பனை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஜிஐசி ரீ ஊழியர்கள், பின்னர் சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாத முதலீட்டாளர்கள் ஏலம் எடுப்பார்கள். ஜிஐசி ரீ ஊழியர்களுக்கு 50,000 முன்பதிவு செய்யப்பட்ட பங்குகளும், அதிக சந்தா செலுத்தினால் 11.95 கோடி பங்குகளும் ஒதுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.