ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், எக்ஸிகியூட்டிவ் லெவலில் சம்பளம் வாங்கும் பணியாளர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. செலவுகளைக் குறைக்கும் வகையில், இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆர்டன் ஹோஃப்மேன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், “அடுத்த 2 வருடங்களில், கிட்டத்தட்ட 2பில்லியன் டாலர்கள் பணத்தை சேமிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிறுவனம் கடினமான முடிவுகளை எடுக்க உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாகனத் துறை சார்ந்த பல நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெனரல் மோட்டார்ஸ் பங்குகள் 1.5% சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.