ஜார்ஜியாவில் சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

May 15, 2024

தென்மேற்கு ஆசிய நாடு நாடான ஜார்ஜியாவில் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி பெற்றால் அவர்கள் வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காக இயங்கும் அமைப்பு என்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த […]

தென்மேற்கு ஆசிய நாடு நாடான ஜார்ஜியாவில் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி பெற்றால் அவர்கள் வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காக இயங்கும் அமைப்பு என்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா மூலம் அண்டை நாடான ரஷ்யாவை போல் அரசுக்கு எதிரான கருத்துக்களை நசுக்க எடுக்கப்படும் முயற்சி என்றும் ஊடக சுதந்திரம் இதன் மூலம் பறிபோகும் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய கொள்கைகளை பின்பற்றி இந்த மசோதாவை ஜார்ஜியா அரசு உருவாக்கி உள்ளது என்று கூறியுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார்கள் வந்துள்ளன. கடுமையான சர்ச்சைக்கு உட்பட்டாலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பிரதமர் ராக்லி கோபாகிட்ஸ் உறுதியாக இருந்தார். வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை வெளிப்படையானதாக உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மசோதாவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக அதிபர் சலோமி எச்சரிக்கை விடுத்தார். எனினும் தேவையான அளவுக்கு மசோதாவுக்கு ஆதரவாக எம்.பிக்களின் பலம் நாடாளுமன்றத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu